தினமணியில் கடந்த 14 ஆண்டுகளாக முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணியில் ஞாயிறு தோறும் வெளியாகும் தமிழ் இலக்கியப் பகுதியான "தமிழ்மணி" பகுதிக்குப் பொறுப்பாசிரியராக இருந்தவர். தற்போது மணிவாசகர் பதிப்பத்திற்கும், நூற்றாண்டுகள் கடந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் பிழை திருத்துநராகவும், நூல் வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மிக விரைவில் இடைமருதூர் கி.மஞ்சுளாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவர இருக்கிறது "தமிழமுது" காலாண்டிதழ். முத்தமிழுக்கு மட்டுமல்ல, அறிவியல் தமிழ், கணினித் தமிழ், கல்லெட்டுத் தமிழ், ஓலைச்சுவடி தமிழ், தமிழ் வளர்ந்த வரலாறு எனப் பலவற்றுக்கும் ஏற்றம் தந்து வெளிவர இருக்கிறது. இவ்விதழ் தனிச்சுற்றுக்கு மட்டுமானது. தனி இதழ் ரூ.30. ஆண்டுச் சந்தா (அஞ்சல் செலவு உட்பட) ரூ.200 ஐந்தாண்டு சந்தா ரூ.1000. புரவலர் தொகை - ரூ.5000 இதழின் பிரதிகளை பிடிஎஃப் படிவத்தில் பெற விரும்புபவர்கள் சந்தாதாரராக இருப்பது அவசியம். சந்தா செலுத்த விரும்புவோர் 9382693102 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்ட...